சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து, நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றனர். இந்த நிலையில், இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ. ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், மு.க., அழகிரி வருகை தந்தனர்.
மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் சென்றிருந்தார். அப்போது பேட்டி அளித்தார். அப்போது, அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார், எனக் கூறினார்.
இதனிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் புறப்பட்ட மு.க., அழகிரியிடம் நிருபர்கள் கேட்டபோது, தி.மு.க., தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என கூறினார்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றனர். இந்த நிலையில், இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ. ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், மு.க., அழகிரி வருகை தந்தனர்.
மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் சென்றிருந்தார். அப்போது பேட்டி அளித்தார். அப்போது, அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார், எனக் கூறினார்.
இதனிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் புறப்பட்ட மு.க., அழகிரியிடம் நிருபர்கள் கேட்டபோது, தி.மு.க., தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என கூறினார்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் வயது மூப்புக் காரணமாக, அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் வயது முதிர்வின் காரணமாக முக்கிய உறுப்புகளின் செயல்பாடு மோசமடைந்துள்ளது. முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கருணாநிதியின் உடல்சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும். மருத்துவ உதவிகளுடன் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.