திருப்பூரில் மீண்டும் சாதி வெறி அரங்கேற்றம் : சாலையில் செல்ல வழி கேட்டதால் தலித் மீது தாக்குதல்

திருப்பூர்: திருப்பூர் அருகே தலித் ஒருவர் சாலையில் செல்ல வழி கேட்ட காரணத்தால், ஆதிக்க அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே தலித் ஒருவர் சாலையில் செல்ல வழி கேட்ட காரணத்தால், ஆதிக்க அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன் (31). ரேவதி தியேட்டர் பின்புறம் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ஆடிப்பெருக்கு நாளான நேற்று கோவிலுக்கு சென்று வீடு திருப்பும் பொழுது ஆதிக்க சாதியினர் சிலர் குடிபோதையில் சாலையின் குருக்கே ஆட்டோவை நிறுத்தியிருந்தனர். இதனால், மகேஸ்வரன், "வாகனத்தை வழி விட்டு நிறுத்துங்கள்" என்று கூறினார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், "நீ தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன். நீ சொன்னால் நாங்கள் கேட்க வேண்டுமா?" என்று கேட்டு மகேஸ்வரனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மகேஸ்வரன் நிலை தடுமாறி கீழே விழுந்ததும், அருகில் உள்ளவர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மகேஸ்வரனின் நண்பரான மாரிமுத்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் 13 தையல் மற்றும் கால் பகுதியிலும் தையல்கள் போடப்பட்டுள்ளன.

புகார்

சாதி வெறி தாக்குதல் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மகேஸ்வரனை நேரில் சந்தித்து பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அதிகாரிகளிடம் சம்மந்தப்பட்ட ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



வழக்கு

இந்த பிரச்சனையில் ஈடுபட்டு மகேஸ்வரனை தாக்கிய அஜீத், பார்த்திபன், குமார் ஆகியோர் மீது தாகத வார்த்தைகள் பேசியது காயம் படும்படி அடித்தது மற்றும் சாதிய வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் திருப்பூரில் தலித் என்பதால் அரசுப் பள்ளியில் பெண் சமையலரை சமைக்க விடாமல் ஆதிக்க சாதியினர் சிலர் தடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே மாவட்டத்தில் மீண்டும் சாதி வெறி அரங்கேறியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...