குழந்தைகள் குப்பைகள் போட்டதால் தந்தையை தாக்கிய அலுவலர்கள்: நடவடிக்கை எடுக்கக்கோரி பேருந்து முன்பு தர்ணா

திருப்பூர்: பேருந்து முன்பதிவு அலுவலகத்தில் குழந்தைகள் குப்பைகள் போட்டதால், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அலுவலர்களைக் கண்டித்து படுகாயமடைந்த தந்தை பேருந்து முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.


திருப்பூர்: பேருந்து முன்பதிவு அலுவலகத்தில் குழந்தைகள் குப்பைகள் போட்டதால், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அலுவலர்களைக் கண்டித்து படுகாயமடைந்த தந்தை பேருந்து முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். 

திருப்பூரைச் சேர்ந்த வள்ளிகணேசன் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல விஷேசத்திற்கு செல்வதற்காக நேற்றிரவு 'பாரத் டிராவல்ஸ்' என்கிற தனியார் ஏஜென்சி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதற்காகப் பேருந்து நிறுத்தம் சென்ற அவர், பேருந்து தாமதமானதால் டிக்கெட் முன்பதிவு செய்த அலுவலகத்தில் காத்திருந்தார். 



அப்போது, அவருடன் இருந்த அவரது குழந்தைகள் சாக்லெட் சாப்பிட்டு விட்டு காகிதங்களை ஆங்காங்கே வீசியதோடு அலுவலகத்தின் சுவர்களையும் கரையாக்கியுள்ளனர்.

இதனைக் கண்ட அலுவலக மேலாளர் மற்றும் ஊழியர்கள் வள்ளி கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கவும் செய்துள்ளனர். 

இதனால், ஆத்திரமடைந்த வள்ளிகணேசன் சென்னை செல்ல இருந்த தனியார் பேருந்தை முற்றுகையிட்டு குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வள்ளி கணேசனிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திருப்பூர் - அவிநாசி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...