ஆடிப்பெருக்கு : மேட்டுப்பாளையத்தில் தாலி மாற்றி சிறப்பு வழிபாடு செய்த தம்பதியினர்

கோவை: ஆடிப்பெருக்கினை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீராடி தாலி மாற்றிய புதுமண தம்பதிகள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

கோவை: ஆடிப்பெருக்கினை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீராடி தாலி மாற்றிய புதுமண தம்பதிகள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கினை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில் சிறப்புயாக வேள்விகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பூஜைகள் செய்து, படையலிட்டு வழிபாடு நடத்தினர்.



தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் இங்கு சிவன், நதி, மயானம் என ஒரு சேர அமைந்திருப்பதால் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலங்களில் இருந்தும் ஆடிப் பெருக்கின் போது தங்களது முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும், ஆடி மாதத்தில் இளம் வயதில் உயிரிழந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய ஆற்றங்கரையில் 7 கற்களை வைத்து படையலிட்டு கன்னி மாரி பூஜை செய்து வழிபட்டனர்.



மேலும், பவானி ஆற்றங்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுப் பண்டங்கள் பலகாரங்கள் ஆகியவற்றை வாழை இலையில் வைத்து பூஜை செய்து பின்னர் அவற்றை காகங்களுக்கு படைத்து வழிபட்டனர். 

அத்துடன் புதியதாக திருமணமான தம்பதியினர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தாலி மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குடும்பத்துடன் வந்து புதுமண தம்பதிகள் பவானி ஆற்றில் புனித நீராடி வழிபாடு நடத்தி, கணவர் கையால் தாலி மாற்றிக்கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...