'நடுக்காடு, யானை வரும் நேரம்., எப்படி தான் ஊர் போய் சேரப்போறோம்..!'- ஆனைகட்டியில் பழுதாகும் பேருந்துகளால் அச்சமடையும் மக்கள்

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை கிராமம் பகுதியில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால். அப்பகுதி மக்கள், பழங்குடியினர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் அச்சத்துடன் நடந்தே தங்கள் கிரமங்களுக்குச் செல்லும் அவல நிலை நிலவி வருகிறது.

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை கிராமம் பகுதியில் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால். அப்பகுதி மக்கள், பழங்குடியினர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் அச்சத்துடன் நடந்தே தங்கள் கிரமங்களுக்குச் செல்லும் அவல நிலை நிலவி வருகிறது.



ஆனைகட்டி பகுதியைச் சுற்றி ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. எண்.24 வீரபாண்டி புதூர் என்கிற முகவரியின் கீழ் இங்கு 23 மலை கிராமங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பில் பல ஆயிரம் மக்கள் ஆனைகட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.

கோவை அரசுப் போக்குவரத்து கழகம், சார்பில் கோவை-ஆனைகட்டி பகுதிக்கு 8 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் - ஆனைகட்டி பகுதிக்கு துடியலூர் வழியாக 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இருமாநில (தமிழக-கேரள) எல்லைப் பகுதி என்பதால் கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கோழிக்கோடு பகுதியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்கிற விதத்தில் பகல் நேரத்தில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனிடையே பெரும்பாலும் தரம் இல்லாத அரசுப் பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் பழங்குடியின மாணவர்கள், வேலைக்குச் செல்லும் மக்கள், பொருட்கள் வாங்க கீழே துடியலூர் வரும் பழங்குடியினர் என அனைத்துத் தரப்பும் மக்களும் தரமில்லாத பேருந்துகளால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை), மதியம் கோவை - ஆனைகட்டிக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. முதலில் ஆலமர மேடு பகுதியில் நின்ற பேருந்தை, டிரைவர் மீண்டும் 'ஸ்டார்ட்' செய்து இயக்கியுள்ளார்.



அதன் பின் மூங்கில் பள்ளம் பகுதியில் பேருந்து மீண்டும் நின்றது. மூங்கில் பள்ளம் என்பது வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. யானைகள், காட்டெருமைகள் என பல வன மிருகங்கள் நடமாடும் பகுதியாகும். அப்பகுதியில் நின்ற பேருந்தை, ஒட்டுநனரால் மீண்டும் இயக்க முடியவில்லை.

அதன் பின் அருகில் உள்ள கிரமத்திற்கு சிலர் நடந்தும், சிலர் அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்தும் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பேருந்தில் பயணித்தவர்களில் ஒருவர் கூறுகையில், "யானை வர நேரம், எப்படி தான் ஊர் போய் சேர்வது?. இது இன்றுமட்டுமல்ல வாரத்துல பலநாள் இப்படி தான் பேருந்துகள் பழுதாகி நிற்கிறது. மிருகங்களுக்கு நடுவே நிற்கவும், நடக்கவும் பயமாக இருக்கிறது." என்றார்.

அப்பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், "வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் பேருந்து பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. தரமில்லாத அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தான் இதற்குக் காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என அரசுப் பேருந்தை நம்பி ஏராளமானோர் இருக்கின்றனர். அரசு தரமான பேருந்தை இப்பகுதியில் இயக்க வேண்டும்." என்றார்.

 

இது குறித்து அரசுப் போக்குவரத்து கழகம் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மலை கிராமங்களில் பேருந்துகள் பழுதாகி நிற்காதவாறு தரமான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. அப்படி நின்றாலும் கூட டிப்போவிலிருந்து உடனடியாக அதிகாரிகள் சென்று பேருந்தை சரி செய்கின்றனர்." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...