சுந்தராபுரம் விபத்து எதிரொலி; கோவை மாநகர போலீஸார் அதிரடி சோதனை

கோவை: சுந்தராபுரம் அருகே 6 பேரை பலி கொண்ட சம்பவம் எதிரொலியாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர போலிசார் இரவு நேரத்திலும் அதிவேகம் மற்றும் மது குடித்து வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டாக தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுந்தராபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அந்த காரின் ஓட்டுனர் ஜெகதீஸ் குமார் மீது போலீசார் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி. என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் தற்போது கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள்  இணைக்கப்பட்டுள்ளது. இதில், 185 என்பது மது அருந்தி அல்லது போதையினால் வாகனத்தை இயக்கியது என்ற பிரிவாகும்.

இந்த நிலையில், போலிசார் கோவையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது மதுபோதையில் வாகனத்தை ஓட்டுவது என சோதனை செய்து விதியை மீறி வரும் வாகனங்கள் மீது மற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். சுந்தராபுரத்தில் நடந்த விபத்தை அடுத்து தற்போது கோவை மாநகர போலீஸார் தீவிரமான கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...