வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது பற்றிய பயிற்சியரங்கு: ஹீலர் பாஸ்கரிடம் போலீசார் விசாரணை!

திருப்பூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 26-ம் தேதி வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது குறித்த ஒருநாள் பயிற்சி என்ற விளம்பரம் வெளியாகியிருப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் சமூக வலைதளத்தை பார்த்து பிரசவம் செய்தபோது திருப்பூரைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மருத்துவரின் தலையீடின்றி இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொண்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க ஆகஸ்ட் 26 ம் தேதி ஒரு நாள் பயிற்சி என கோவை புதூரை சேர்ந்த நிஷ்ட்டை என்ற அமைப்பு சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. 

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த "நிஷ்டை" அமைப்பின் சுகப்பிரசவம் விளம்பரம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர். சுகாதாரத் துறை அதிகாரிகள் நிஷ்டை என்ற அமைப்பு குறித்து தகவல்களை சேகரித்ததோடு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து கலந்தாலோசித்தனர். 

இதனையடுத்து, நிஷ்டை அமைப்பு மீது கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி காவல்துறையில் புகாரளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நிஷ்டை அமைப்பைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கரிடம் விசாரணை நடந்துவருகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...