30-ஆம் தேதிக்கு முன்னதாகவே ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது - திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஊதியம் இதுவரை ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஊதியம் இதுவரை ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், மாணவ மாணவியருக்கான உன்னால் முடியும் பயிற்சி பட்டறை துவக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினர்.

இதையடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினர். 

அதற்கு, "அது போன்ற நிலை எங்கும் இல்லை. தேவைக்கேற்ப அங்கங்கே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம் என்பது ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை. இந்த அரசு மாதம்தோறும் 30-ஆம் தேதிக்கு முன்னதாகவே அவர்களுக்கு வேண்டிய நிதியை வழங்கி வருகிறது." என்றார்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...