பிணவறையில் லஞ்சம் கேட்ட பிணவறை ஊழியர் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

கோவை: கோவை அரசு மருத்துவமனையின் பிணவறையில் உடலை வாங்க வந்தவர்களிடம் அங்கு பணிபுரிபவர் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையின் பிணவறையில் உடலை வாங்க வந்தவர்களிடம் அங்கு பணிபுரிபவர் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 24 ம் தேதி சாலைவிபத்துக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு சுமார் 5 நாட்களுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில், சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனால், இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யக்கூட இவர் குடும்பத்தில் பணவசதி இல்லாத சூழல் இருந்தது.

ஆகவே ஏழ்மையில் தவித்த இந்த குடும்பத்திற்கு உதவ திருப்பூரைச் சேர்ந்த சமூக அமைப்பினர் சேர்ந்து இவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.

தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க வந்த சமூக அமைப்பினரிடம் மருத்துவமனை பிணவறையில் பணிபுரியும் காண்டிராக்ட் பணியாளர் மன்சூர் என்ற ஊழியர் ரூபாய் 1500 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள், "ஏழ்மை குடும்பத்திற்காக உதவ வந்துள்ளோம். ஆனால் எங்களிடமே லஞ்சம் கேட்பது நியாமில்லை." என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது பணியில் இருந்த பிணவறை ஊழியர் கறாராக காவல்துறையினர் முன்னிலையிலேயே பணத்தை கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

அப்போது பணம் தரவில்லை என்றால் நீங்களே இறந்த உடலை எடுத்து செல்ல வேண்டும் என்றுள்ளார். பணத்திற்காக பணி செய்யவும் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகிய வீடியோ கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் தொடர்ந்து லஞ்சம் புரள்வதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...