6 பேர் பலி., எனது டிரைவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டவில்லை - காரின் உரிமையாளர் விளக்கம்

கோவை: சுந்தராபுரம் அருகே கார் மோதி 6 பேர் பலியானதற்கு, காரின் ஓட்டுனர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதே காரணம் என்ற வதந்தி பரவி வந்த நிலையில், அந்த காரின் உரிமையாளரும், ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவருமான மதன் என்கிற செந்தில் விளக்கமளித்துள்ளார்.

கோவை: சுந்தராபுரம் அருகே கார் மோதி 6 பேர் பலியானதற்கு, காரின் ஓட்டுனர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதே காரணம் என்ற வதந்தி பரவி வந்த நிலையில், அந்த காரின் உரிமையாளரும், ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவருமான மதன் என்கிற செந்தில் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறியதாவது:- 

ஜெகதீசன் கடந்த 2 ஆண்டுகளாக எனது டிரைவராக உள்ளார். தினமும் கல்லூரியில் இருந்து 'பாஸ்' வாங்கிக்கொண்டு என்னை வீட்டில் வந்து அழைத்துச் செல்வார். சம்பவம் நடந்த போது அவர் குடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் அவரது அறையில் தங்கியுள்ளவர்களிடம், விசாரணை நடத்திய போது இது தெரியவந்தது.

அவர் மது அருந்திவிட்டு வந்திருந்தால், கல்லூரியில் 'பாஸ்' வாங்கும் போதே அவருக்கு காரின் சாவியை கொடுத்திருக்க மாட்டார்கள். 

மேலும், தற்போது நடத்தியுள்ள ரத்த பரிசோதனையிலும் அவர் குடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

இருந்தபோதும், அவர் மது அருந்தியிருந்தார் என்றும், அந்த காரை ஓட்டியது எங்கள் கல்லூரியின் முதல்வர் என்றும் பல்வேறு வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர், அதிவேகமாக காரை இயக்கியது உறுதியாகியுள்ளது. ஆனால், நான் காரில் செல்லும் போது அவர் இந்த வேகத்தில் சென்றதே இல்லை. செல்போன் காரினுள் கீழே விழுந்து அதனை எடுக்க முற்பட்ட போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மிகுந்த குழப்பத்தில் உள்ளோம். காவல் நிலையத்தில் இருந்து தற்போது எங்களை அழைத்துள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பின் டிரைவர் மீது நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு குறித்து தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜெகதீசன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279 (பொதுமக்கள் நடைபாதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல், 338 (அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல்) மற்றும் 304 (II) (உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...