சிங்காநல்லூரில் சாக்கடைக் கழிவுகளால் தீவுகளாய் மாறிப்போன குடியிருப்புகள்: கதறும் பொதுமக்கள்

கோவை: சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது கமலா மில் குட்டை குடியிருப்புப் பகுதி. இங்குள்ள மூன்று வீதிகளில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. சீரான வடிகால் வசதியில்லாததால் குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து இப்பகுதி சாக்கடை தீவு போல் காட்சியளிக்கிறது.

கோவை: சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது கமலா மில் குட்டை குடியிருப்புப் பகுதி. இங்குள்ள மூன்று வீதிகளில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன. சீரான வடிகால் வசதியில்லாததால் குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து இப்பகுதி சாக்கடை தீவு போல் காட்சியளிக்கிறது.

கிழக்கு மண்டலம், வார்டு எண் 64-க்கு உட்பட்ட இப்பகுதியில், நான்கு வருடங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் கழிவு நீர் வடிகால் புனரமைக்கப்பட்டது. ஆனால், சாலையை ஒட்டியுள்ள பிரதான கழிவுநீர் வடிகாலைவிட உயரமாக அமைக்காததால் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற சூழல் உருவாகி வருகின்றது.



கழிவுநீர் தொல்லை

"இப்பகுதியில் உள்ள மூன்று வீதிகளிலும் சாக்கடை கால்வாய் உள்ளது. இவை அனைத்தும் பிரதான கால்வாயோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளாலும், சாலை மட்டத்தைவிட தாழ்வாக அமைக்கப்பட்டதாலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வடிந்து செல்ல வழியின்றி குட்டை போல் தேங்கி நிற்கிறது.

மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது வந்து மோட்டாரின் உதவியோடு தற்காலிகமாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி வருகிறார்கள். பிரதான கால்வாயில் அதிக அளவு கழிவு நீர் வடிந்தால் தாழ்வான வடிகால் வழியாக குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது. மழைக்காலங்களில் சாக்கடை பெருகி குடியிருப்பு வாசிகளுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்துகின்றது." என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் தியாகராஜன்.

மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீர் குழாய்களைச் சுற்றி கழிவுநீர் தேங்கி இருப்பதால் குழாயில் உள்ள உடைப்புகளின் வழியாக கழிவுநீர் கலந்து விடுவதாகவும் இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.



இது குறித்து ருக்மணி என்ற குடியிருப்பு வாசி கூறுகையில், "இப்பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்குவதால் குடிநீர் இணைப்புகளை மேடான பகுதிக்கு மாற்றி அமைக்கக் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், பெரும்பாலான வீடுகளில் போர் வசதி இல்லை, அதனால் குளிக்கவும் துவைப்பதற்கும் மாநகராட்சி பொது குழாய்களை மட்டுமே நம்பி உள்ளோம். அவ்வப்போது தண்ணீர் குழாய்களைச் சுற்றி சாக்கடை நீர் தேங்கி விடுகிறது. தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு பச்சை நிறத்தில் தண்ணீர் வருகிறது.

வேறு வழியின்றி அதையும் பயன்படுத்தி வருகிறோம். மழை நாட்களில் கொசு தொல்லையால் இப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்." என்றார்.

வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்கியிருப்பதால் சொந்த வீடு இருந்தும், அதைப் பூட்டிவைத்துவிட்டு வேறு பகுதிகளுக்கு வாடகை வீடு எடுத்து பலர் வசித்துவருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



மேலும், மூன்றாவது வீதியில் உள்ள டாஸ்மாக் கடையால் இப்பகுதியில் குடிகாரர்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பெண்கள் புகார் கூறுகின்றனர்.

டாஸ்மாக் தொல்லை

"டாஸ்மாக் கடையின் பின் வாசல் என் வீட்டிற்கு மிக அருகில் உள்ளது. காலையில் தொடங்கும் குடிகாரர்களின் கூச்சல் சத்தம் நள்ளிரவு வரை ஓயாமல் கேட்கிறது. இதனால் நிம்மதியா தூங்கக்கூட முடிவதில்லை. இறைச்சி கழிவுநீர், ப்ளாஸ்டிக் குப்பைகள் என அனைத்தையும் சாக்கடை பாதையில் கொட்டி கழிவு நீர் வடிந்து செல்லும் பாதையை அடைத்து விடுகின்றனர்.



இதனால், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குடிபோதையில் வெளியே வருபவர்கள் குடியிருப்பு வாசிகளோடு தினமும் தகராறு செய்கின்றனர். இவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.



மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் நாங்கள் யாரும் வெளியில் வருவதேயில்லை. மேலும், மின்விளக்குகள் இல்லாததால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோவிலில் இருந்த சிலைகளை கூட திருடிச் சென்றுவிட்டனர்." என்கிறார் இரண்டாவது வீதியில் வசிக்கும் மற்றொரு குடியிருப்புவாசி.

நகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைந்துள்ள இப்பகுதி சுகாதாரமற்ற இடமாகவும், பாதுகாப்பில்லாத வசிப்பிடமாகவும் மாறிவருவதை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...