சுந்தராபுரம் பகுதியில் கார் மோதி ஆறு பேர் பலி: ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்

கோவை: சுந்தராபுரம் பகுதியில் சொகுசு கார் மோதி ஆறு பேர் பலியான சம்பவத்தில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்று காலை பொள்ளாச்சி சாலையில் இருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார் சுந்தராபுரம் அருகே நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நாராயணன் (70), அம்சவேணி (34), சுபாஷினி (18) என்ற கல்லூரி மாணவி, குப்பாத்தாள் (70), ஸ்ரீ ரங்கதாஸ் (69) மற்றும் வேலம்மாள் (60) ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சோமசுந்தரம் (50) என்பவரை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...