கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வசம் உள்ளது - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன்

கோவை: கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வசம் உள்ளதாக பழனி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வசம் உள்ளதாக பழனி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகிகள், இங்குள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பா.ஜ.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. கோவை நகர் மன்றத்திற்கு உட்பட்ட சட்ட மன்ற தொகுதிகளின் மாநில பொறுப்பாளர் கட்டளை ஜோதி, ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், பழனி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், "வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்கான அடித்தள வேலைகளை ஆரம்பித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பூத்களிலும் கமிட்டி அமைப்பது, கமிட்டிகளுக்கு கூட்டம் நடத்துவது மற்றும் பொறுப்பாளர்களை உற்சாகப் படுத்துவதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் மண்டல அணிகளின் பொறுப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வசம் உள்ளது. சூழலின் காரணமாக இத்தொகுதியை இழக்க நேரிட்டோம். வரும் 2019-ல் கோவை பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெறும். பொறுப்பாளர்களின் உற்சாக மனநிலையைக் காண முடிகிறது. 

கோவை மாநகரில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. போக்குவரத்து பாதிக்க கூடிய சாலைகள் மற்றும் குடிநீர் பிரச்சனை தவிர்க்க முடியாத பிரச்சனைகளாக உள்ளது. கோவையில் உள்ள மேம்பால பணிகள் முழுமை பெறவில்லை. பொதுமக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பா.ஜ.க சார்பில் பல்வேறு மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. நிரந்தர தீர்வு காணாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி போராட்டங்களில் ஈடுபடும்.

கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு தொண்டர்களின் பணி குறைவாக இருந்திருக்கலாம் அல்லது மக்கள் சிந்தனைகள் வேறு மாதிரி இருந்திருக்கலாம். இப்போது மக்கள் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர்.

தன்னலமில்லாத தலைவர் பிரதமர் மோடி எனவும் அவரை மக்கள் மனமார ஏற்றுக் கொண்டு உள்ளதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சூயஸ் நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளதை தொடர்பான கேள்விக்கு, இதனைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இன்று மாலை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...