தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - உயர்நீதிமன்றம் பளார்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்றும், தேர்தல் தொடர்பான அட்டவணையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்றும், தேர்தல் தொடர்பான அட்டவணையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க., தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது. 

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையைதிங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...