கோவையில் சி.ஐ.ஐ., டை மற்றும் ஐ.ஐ.எப்., அமைப்புகள் நடத்திய பொது பங்கு வெளியீடு கருத்தரங்கு

கோவை: சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீடு குறித்த கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.

கோவை: சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொது பங்கு வெளியீடு குறித்த கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), டை ( சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பு - கோவை கிளை ) மற்றும் ஐ.ஐ.எப் ( இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் பவுண்டரிமேன்) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, பட்டியிலிடுவது உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன.



கருத்தரங்கில் டை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் பேசுகையில், "கோவை மண்டலத்தில் உள்ள பல சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியிலிட தகுதி வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. இதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கவும், பங்குச்சந்தை பற்றிய தவறான எண்ணங்களை மாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் அவசியம்.’’ என்றார்.

தேசிய பங்குச்சந்தையின் தலைவர் ரச்னா பூஜாரி பேசுகையில், "தேசிய பங்குச்சந்தையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலிடப்படுவது, மற்ற பட்டியலியிடுவதை விட சற்று மாறுபட்டது. முதலீட்டாளர்களுக்கு இதில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குச்சந்தை வாயிலாக பல நிறுவனங்கள் தொழில் அபிவிருத்தி செய்ய நிதி திரட்ட முடியும். பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வட்டிச்சலுகை உண்டு. கடந்த ஆண்டு 165 நிறுவனஙகள் புதியதாக பட்டியிடப்பட்டுள்ளன. கோவையில் உள்ள சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள், பங்கு வெளியீட தேசிய பங்குச் சந்தை உதவும்." என்றார்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...