ஜி.எஸ்.டி வரிவிலக்கில் ஜமக்காளத்தை சேர்க்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு எம்.பி. சத்தியபாமா கடிதம்

திருப்பூர்: சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு பெறும் கைத்தறி தரைவிரிப்புகளில் பவானி ஜமக்காளத்தையும் சேர்க்க கோரி மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயலிடம் திருப்பூர் தொகுதி எம்.பி. சத்தியபாமா நேற்று நேரில் கடிதத்தை கொடுத்தார்.

திருப்பூர்: சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு பெறும் கைத்தறி தரைவிரிப்புகளில் பவானி ஜமக்காளத்தையும் சேர்க்க கோரி மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயலிடம் திருப்பூர் தொகுதி எம்.பி. சத்தியபாமா நேற்று நேரில் கடிதத்தை கொடுத்தார்.



அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் திருப்பூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் உள்ளடங்கிய பவானி பகுதியில் பாரம்பரியமாக கைத்தறி நெசவாளர்களால் கையால் நெய்யப்படும் பிரசித்தி பெற்ற ஜமக்காளத்தை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலாவதற்கு முன் பவானி ஜமக்காளத்துக்கு அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்ட பிறகு வரி விலக்கு பெறும் பொருட்களின் பட்டியலில் பவானி ஜமக்காளம் இடம்பெறவில்லை.

இந்த அரிய படைப்பு தரைவிரிப்பு பொருட்களின் வகை சார்ந்ததா? என்பது பற்றி பெரிய குழப்பும் நிலவுகிறது. கடந்த 300 ஆண்டுகளாக பவானி பகுதி வாழ் நெசவாளர்களால் பாரம்பரியமாக கையால் நெய்யப்பட்டு வரும் படைப்பாகும். 

இது ஒரு குடிசைத் தொழிலாகும். இதனால் இந்தப் பகுதியைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலைவாய்ப்பையும் வாழ்வாதார உதவியையும் பெற்றுள்ளனர். எனவே ஜி.எஸ்.டி.,யில் இருந்து இந்த அரிய பொருளுக்கு விலக்கு அளிக்க வேண்டியது அவசியம்.

எனவே பவானி ஜமக்காளத்தை உருவாக்குவதிலும் விற்பதிலும் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு பெறும் கைத்தறி தரைவிரிப்புகளில் பவானி ஜமக்காளத்தையும் சேர்க்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...