சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம்

கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது. 



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 859 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு நன்கொடை ரூ. 1 லட்சம், ஆசிரியர் பணிக்கு ரூ. 3 லட்சம், பொறியியல் படிக்க ரூ. 50 லட்சம் என்ற பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், மருத்துவர், பட்டதாரி ஆடை அணிந்து மணி அடித்து நூதன முறையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அரசுப் பள்ளிகளை மூட கூடாது, தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கத்தினர் பேசுகையில், "859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசு, 800 டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தராமல் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது," இவ்வாறு அவர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...