உலக பசி தினம்: கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய 'ஃபுட் பேங்க்'

கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார், முன்னாள் லெப்டினன்ட் ஈசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஓவியப் போட்டி, புகைப்பட போட்டி, பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இது தொடர்பாக உணவு வங்கியின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், "பசி என்பது கொண்டாட்டம் அல்ல. அதனால் தான், சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பசி என்ற சொல்லுக்கு முடிவுகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்." என்றார்.



இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உணவு வங்கியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...