தமிழகத்தில் மே 28-ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் நாளை கோடை மழை முடிந்து, நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது :- இந்தாண்டு தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரியான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 772 மீ.மீ. மழை பெய்யும். குறைந்தபட்சம் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மே மாதம் 28-ம் தேதி தொடங்கும் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். 16 முதல் 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் 213 மீ.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்தாண்டு 301 மீ.மீ. மழை பெய்துள்ளது. 

தமிழகத்தில் 350 முதல் 360 மீ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடங்கிய பருவமழை கன்னியாகுமரி வழியாக தமிழகத்தில் தொடங்கும். வேளாண் பெருமக்கள் முடிந்த அளவு மழை நீரை மரங்களுக்குப் பாத்திகட்டியும், பண்ணைக் குட்டைகளில் நீர் சென்றடையும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம், மழை நீரை சேமிக்க முடியும். நீர் நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும்படி நீர் வழி பாதைகள் சுத்தம் செய்து கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...