குட்கா வழக்கு விவகாரம்: ஜாமீன் பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு

கோவை: கோவை குட்கா வழக்கு விவகாரத்தில் ஜாமீன் பெற்றிருந்த தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டது.

கோவை: கோவை குட்கா வழக்கு விவகாரத்தில் ஜாமீன் பெற்றிருந்த தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டது.

கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குட்கா ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் முன்ஜாமீன் கேட்டு கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, சூலூர் காவல்நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கிக் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் தினந்தோறும் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...