'காவல்நிலையம் தோறும் நூலகம்' திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' என்ற திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.


கோவை : கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' என்ற திட்டத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

பல்வேறு தேவைகளுக்காக காவல்நிலையத்தை அணுகுகின்ற மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குபடுத்துவதுடன், அவர்கள் காத்திருக்கும் நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம். கோவையில் இயங்கி வருகின்ற 36 ரோட்டரி சுழற்சங்கள் தங்கள் பகுதியில் அமைத்துள்ள 38 காவல்நிலையங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திப் பராமரிக்க உள்ளனர். 



இந்த நிலையில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'காவல்நிலையம் தோறும் நூலகம்' திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடக்கி வைத்தார். மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் சக்தி மின்கலனையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 

பின்னர் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி.அ. பாரி கூறியதாவது :- ஒவ்வொரு காவல்நிலையத்திலும் நூலகங்கள் அமைத்தால், காவல்நிலையங்களே தேவைப்படாமல் போய்விடும். புத்தகங்கள் வரலாற்றின் அடையாளம். தமிழகத்திலேயே காவல்நிலையத்தில் நூலகம் என்ற பெருமை கோவைக்கு உண்டு. பல்வேறு பிரச்சனைகளில் வருபவர்கள் மற்றும் குற்றவாளிகள் புத்தகங்களைப் படிக்கும் போது, அவர்களது வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும்." எனக் கூறினார். மேலும், இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என அவர் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தை பரவும் போது சமூக விரோதங்கள் குறையும். முதலமைச்சர் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்த முயல்வேன். காவல்நிலையம் வரும் பொதுமக்களை புத்தகங்கள் படிக்க போலீசார் ஊக்கப்படுத்த வேண்டும்," என்றார். 

இந்த விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், கோவை மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் மூர்த்தி, கவிஞர். கவிதாசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...