60-வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கியது

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறக் கூடிய 60-வது குன்னூர் பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறக் கூடிய 60-வது குன்னூர் பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.



குன்னுார் சிம்ஸ்பூங்காவில் 60-வது ஆண்டு பழக்கண்காட்சி இன்று தொடங்கி நாளை நிறைவு பெறுகிறது. நுழைவாயிலில் 60-வது பழக்கண்காட்சி என்ற வடிவமைப்பு 12 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



பூங்காவினுள் ஒரு மெட்ரி டன் எடை கொண்ட கருப்பு மற்றும் பச்சை திராட்சைகளால் உருவாக்கப்பட்ட 9 அடியில் யானை, 6 அடியில் குட்டியானை சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.



அதுமட்டுமின்றி, மேடை அரங்கு அருகே சுற்றுலா பயணிகள் அனைவரும், 'செல்பி' எடுக்கும் வகையில் பழங்களால் ஆன ரங்கோலி வடிவமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு டன் வரையில் திராட்சை, பலா, பப்ளிமஸ், ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 



கன்னியாகுமரி, திருச்சி, கடலுார், திருப்பூர், வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், இன்கோசர்வ், டான்டீ, தேன் விற்பனை, ரோஜா அரங்கு மற்றும் மகளிர் குழுக்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



மேலும், 2,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட சால்வியா, பெகோனியா, பால்சம், ஜின்னியா உட்பட பல்வேறு வண்ண மலர்களும் ஆங்காங்கே சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 60-வது பழக்கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பி. செல்வராஜ் தொடங்கி வைத்தார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...