மதம் பிடித்த சமயபுரம் கோவில் யானை மிதித்து பாகன் பலி (வீடியோ)

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் பக்தர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மதம் பிடித்த திருச்சி சமயபுரம் கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் கஜேந்திரன் (44) என்பவர் உயிரிழந்தார். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தர்கள் ஓடியதாலும் 8 பேர் காயமடைந்தனர். மேலும், அந்தப் பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



யானைக்கு மதம்பிடித்ததால் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடை தற்காலிகமாக சாத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதம்பிடித்த யானைக் கட்டுப்படுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...