முடங்கியது தொழில்நகரமான திருப்பூர் : ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 



தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருப்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதோடு, அங்குள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த பிரின்டிங், டையிங், காம்பாக்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் இயங்கவில்லை. அதேபோல, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

மாவட்டம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல செயல்படுகின்றன. இதனிடையே, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதேபோல, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகையில் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கூடலூரில் நூறு சதவீத கடைகளும், குன்னூர், கோத்தகிரியில் 80 சதவீதம் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...