தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் : கோவையில் இயக்கப்படும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தம்

கோவை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் இருந்து இயக்கப்படும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.


கோவை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் இருந்து இயக்கப்படும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 



தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையொட்டி, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வந்தாலும்,  பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முன்னெச்சச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக  கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த 52 பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், கோவையில் பேருந்துகள் இயக்கம் குறைவாக இயக்கப்படுகிறது.  

இதனிடையே, கன்னியகுமாரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர், இறச்சகுளம், வட்டக்கரையில் 3 அரசு பேருந்துகள் மீது கல்வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.  இதனால், கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லை பகுதியான கன்னியாகுமரின் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...