'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் 'மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான 'மேகுனு' புயல் மிக தீவிர புயலாக மாறியுள்ளது. இது, மத்திய அரபி கடல் பகுதியில் இருந்து, தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் வரும் நாளை மறுநாள் (மே 26) ஓமன் மற்றும் ஏமன் நாடுகளுக்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசுகிறது. இன்று மணிக்கு 160 முதல் 170 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

மேகுனு' புயல் தீவிரமடைந்து வருவதால் கர்நாடகம், கேரளா மற்றும் லட்சத்தீவு, அந்தமான், நிகோபார் தீவுகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, தமிழக மீனவர்கள் 26-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்குள், மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய கடற்பகுதியில் நேற்று துவங்குவதாக இருந்த தென் மேற்கு பருவமழை, புயல் காரணமாக தாமதமாகியுள்ளது. நேற்று முதல், பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் தெரிவதால், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவரை, சில இடங்களில் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...