தூத்துக்குடி மக்களை சாந்தப்படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு: துணை சபாநாயகர் ஜெயராமன்

கோவை: தூத்துக்குடி மக்களை சாந்தப்படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு என்றும், அவர்களுக்கு தற்போது கசப்புணர்வு இருந்தாலும், விரைவில் தாயின் மடியில் கண்டிப்பாக அமர்வார்கள் என சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: தூத்துக்குடி மக்களை சாந்தப்படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு என்றும், அவர்களுக்கு தற்போது கசப்புணர்வு இருந்தாலும், விரைவில் தாயின் மடியில் கண்டிப்பாக அமர்வார்கள் என சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- இன்று சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் திடீரென கூட்டத்தை விட்டு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். எதிர்கட்சி தலைவராக செயல்படுவதை எடுத்துக்காட்டவே அவர் இவ்வாறு செய்துள்ளார். இது போன்ற நிகழ்வுகளை ஸ்டாலின் கைவிட வேண்டும். தூத்துக்குடியில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகின்றனர். எனவே, துணை ராணுவத்தை அழைக்க வேண்டிய தேவையில்லை.

மக்களை துன்புறுத்தும் எண்ணம் அ.தி.மு.க.,விற்கு கிடையாது. போராட்டத்தை சிலர் தூண்டு விடுகிறார்கள். 200, 300 ஓட்டுகள் கூட இல்லாதவர்கள், டெபாசிட் வாங்காதவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள மக்களை தூண்டி விடுகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் மனவேதனை அளிக்கும். அதே வேளையில், போராட்டக்காரர்கள் என்ன செயலில் ஈடுபட்டார்கள். காவலர்கள் ஏன் இதனைச் செய்தார்கள் என்பது ஒருநபர் விசாரணை முடிவில் தான் தெரியும். பொத்தம் பொதுவாக காவல்துறை மோசம் என சொல்வது தவறான ஒன்று.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறது. காவல்துறையை யாரும் மட்டம் தட்டக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதி கொடுத்தது தி.மு.க., அரசுதான். இந்தப் பிரச்சினைக்கு மொத்தக் காரணமும் தி.மு.க., தான். அமைச்சர்கள் நிச்சயம் தூத்துக்குடி செல்வார்கள்.

செல்வதில் யாருக்கும் தயக்கமில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் நாங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ள போராடுகிறார்கள்.

தூத்துக்குடி மக்களை சாந்தப்படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு. எனவே, மக்களை சாந்தப்படுத்துவோம், கைவிட மாட்டோம். தேவையில்லாத வதந்திகளைப் பரப்பக்கூடாது என்பதற்காக இணைய சேவையை முடக்கியுள்ளோம். தூத்துக்குடி மக்களுக்கு இப்போது கசப்புணர்வு இருந்தாலும், விரைவில் தாயின் மடியில் கண்டிப்பாக அமர்வார்கள். முதலமைச்சரின் ஓராண்டு ஆட்சியில், இப்போது தான் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில், எங்கோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கும். அதுபோல தான் இதுவும், எனத் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...