அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் 27-ல் தொடக்கம்

கோவை: அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வரும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை: அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வரும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ., பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் வரும் 26-ம் தேதி தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்த இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

இந்த போட்டிகளில் பஞ்சாப் போலீஸ், புதுடில்லி-இந்திய விமானப்படை, சென்னை- வருமான வரி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், டெல்லி இந்தியன் ரயில்வே அணி, பெங்களூரு ஏ.சி.எஸ், புது டெல்லி வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி போன்ற இந்தியாவின் தலைசிறந்த 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

பெண்கள் பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே, திருவனந்தபுரம் கேரள போலீஸ், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், மைசூர் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், திருவனந்தபுரம் கேரள மின்வாரியம், தமிழ்நாடு ஜூனியர்ஸ் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி பங்கேற்கவுள்ளன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 50,000 மற்றும் டாக்டர் மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறத்தவறிய இரு அணிகளுக்கு ரூ. 15,000-மும். நன் நடத்தைக்கு தேர்வு செய்யப்படும் அணிக்கு ரேணுகா ராமநாதன் நினைவு விருதும் வழங்கப்படுகிறது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 50,000 மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பையும்,  இரண்டாம் பரிசாக ரூ. 25,000 மற்றும் சுழற்கோப்பையும், அரையிறுதி போட்டியில் வெற்றி பெற தவறிய இரு அணிகளுக்கு தலா பத்தாயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்படுகிறது.

இப்போட்டிகள் வரும் 26-ம் தேதி தொடங்கி, வரும் 31-ம் தேதி வரை வ.உ.சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. 31-ம் தேதி மாலை நடைபெறும் இறுதிப் போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...