பிரதமர் மோடிக்கே சவால் விட்ட கோலி: சவாலை ஏற்பதாக மோடி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நடிகர் ஹிருத்திக் ரோஷன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்தார். இடைவிடாது 10 முறை 'புஷ் அப்' செய்து வீடியோவை வெளியிட்டு, தம்மை போல் செய்ய முடியுமா எனவும் சவால் விடுத்திருந்தார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர் கோலி, தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி, மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோர் தன்னை போல் பண்ண முடியுமா எனவும் 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில், விராத் கோலியின் சவாலை ஏற்பதாகவும், விரைவில் தனது ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட உள்ளதாகவும் இன்று பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...