தி.மு.க., தலைமையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்பு

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.

நாளை நடைபெறும் பந்த் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...