தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கேடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக உள்ள வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக உள்ள மகேந்திரன், சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக உள்ள சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.