கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியினருக்கான வசதி அறிமுகம்

கோவை: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா திறந்து வைத்தார்.

கோவை: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா திறந்து வைத்தார்.



கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு என சுகம்யா பாரத் அபியான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம், அரசு மற்றும் பொதுக்கட்டிடங்களில் சக்கர நாற்காலியில் செல்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. கோவையில் ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் இத்திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் அரசுப் பள்ளிகள், பொது கட்டிடங்களில் சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.



கோவையை மையமாகக் கொண்டு செயல்படம் கட்டுமான நிறுவனமான விஸ்வநாதன் கன்ஸ்டிரக்சனுடன் இணைந்து இதுபோன்ற பணிகளை ஸ்வர்கா பவுண்டேசன் செய்து வருகிறது. இந்த நிலையில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்பட்டது. இதனை காவல் ஆணையர் கே. பெரியய்யா பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் திறன்மிக்க மாற்றுத்திறனாளிகளின் மூலம் காவல் ஆணையர் அலுவலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...