கோவை: தமிழகத்தில் 2018-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பினை தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
எதிர்வரக் கூடிய 2018-ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன்(Australian Rainman InternationalV.4.3 Software) என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2018-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் 60 சதவிகித வாய்ப்பிற்கான மழையளவு பின்வருமாறு:-
கோயமுத்தூர், சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, தேனி, தருமபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாலத்தில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவகாலத்தில் சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களாக ஐந்து மாவட்டங்கள் உள்ளன. அவை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.