தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலீசார் திணறி வரும் நிலையில், துணை ராணுவம் தமிழகத்திற்கு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். அண்ணாநகர் பகுதியில் இன்று போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்கு ரப்பர் குண்டு மூலம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், காளியப்பன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக தலைமை செயலாளரிடம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா, தூத்துக்குடி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை அனுப்ப தயாராக உள்ளதாக கவுபா தெரிவித்துள்ளார். எனினும், தமிழக அரசு கேட்கும் பட்சத்தில் மட்டுமே மத்திய அடைகள் அனுப்பப்படும் என அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தை அனுப்பி வைக்குமாறு தமிழக போலீசார் தரப்பில் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வருகின்றனர். 1965-க்கு பிறகு துணை ராணுவம் தமிழகத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது.