அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை : கோவை இளையதலைமுறை அமைப்பினர் வலியுறுத்தல்

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். 

இது தொடர்பாக அந்த அமைப்பினரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :- 

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும், என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை கடந்த 21-ம் தேதி இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுவாக அளித்தோம். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை விளக்கிய அமைச்சர்கள், இதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 

மேலும், மருத்துவ கல்வித்துறை, வனத் துறை, மீன் வளத்துறை, கால்நடைத் துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரின் செயலாளர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அவர்கள், நாங்கள் அளித்த மனுவை அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தனர். 

5 சதவீதம் மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே இடம்பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500-ஐ கூட கட்டணமாக செலுத்த முடியாத ஏழை மாணவர்களால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50,000 கட்டணம் கட்டி படிக்க முடியும்? இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம். 

இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...