கோவையில் தடுப்பணை இல்லாமல் வீணாகும் ஓடை நீர்

கோவை: தமிழக மக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கோவையில் சரியான தடுப்பணை இல்லாமல் ஓடை நீர் வீணாகி வருகிறது.


கோவை: தமிழக மக்கள் தண்ணீருக்கு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கோவையில் சரியான தடுப்பணை இல்லாமல் ஓடை நீர் வீணாகி வருகிறது. 



குரும்பபாளையம் பகுதியில் மஞ்சுப் பள்ளம் என்ற ஓடை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நீர் வரத்து இருந்த இந்த ஓடையில், வறட்சி, ஆக்கிரமிப்பு மற்றும் மணல் கொள்ளை காரணமாக தண்ணீர் வரத்து குறைந்தது. இருந்த போதிலும் பருவமழையின் போது இந்த ஓடையில் நீர்வரத்து இருக்கும். இந்த நிலையில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு அப்பகுதியில், இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டது. 

முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், நவம்பர் மாதம் பெய்த மழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காரணத்தாலும் ஒரு தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்தது. மற்றொரு தடுப்பணை சேதமடைந்து வருகிறது. 

கடந்த இரண்டு வாரங்களாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், மஞ்சுப் பள்ளம் ஓடையில் வரும் நீர் வீணாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. 



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த ஓடையால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. மணல் திருட்டு நடைபெறுவதால் நீர் தங்குவது இல்லை. தற்போது தடுப்பணைகளும் சேதமடைந்து விட்டதால், நீரைத் தேக்கி வைக்க வழியில்லாமல், வீணாக விரயமாகி வருகிறது. இதனைத் தடுத்து, கோவையில் விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.


Video: Laxman

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...