நீலகிரி: இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீடித்திருக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

உதக மண்டல அரசு தாவிரவியல் பூங்காவில் 122-வருடாந்திர மலர் காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், "இயற்கை அன்னையைப் போன்றது, அதனை மதித்து செயல்பட வேண்டும். இயற்கையின் அழகை மலர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது. இத்தகைய மலர் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, மலர் மற்றும் பூந்தோட்ட ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கிறது. மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர்கள் பற்றிய முதல் தகவல்களை அறிகின்ற வகையில் இங்கு துலிப், டிஸ்பட்ஸ் மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு அதிகளவு கிடைக்க நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்." என்றார்.
இந்த விழா முடிந்து வெளியே வந்த ஆளுநரிடம் செய்தியாளர்கள், தூத்துக்குடி வன்முறை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். ஆனால், ஆளுநர் எந்த பதிலையும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.