தூத்துக்குடியில் போர்க்களமான ஸ்டெர்லைட் போராட்டக்களம்: போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.


தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று 99-வது நாளை எட்டியது. இந்த நிலையில், இன்று 100-வது நாள் போராட்டம் நடக்கிறது. இதையொட்டி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.



இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கு ஆதரவாக தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 10 ஆயிரம் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்றிரவு முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் இன்று 100-வது நாள் பேரணியாக சென்றனர். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே காவல் துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.



போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசாரின் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கலகக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முற்றுகையிட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இதனையும் மீறி ஒரு தரப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்புகை குண்டுகளையும் வீசியதால், போராட்டக்களம், போர்க்களம் போல காட்சியளித்து வருகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...