பார்முலா ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரர் சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 



தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், எம்இசிஓ மோட்டார் ஸ்போர்ட் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறந்த கார் பந்தய வீரர்களுக்கான கோடைகால போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவையில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் இந்த ஆண்டுக்கான 'பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டி' நடைபெற்றது. இதில், கோவை, பெங்களூரூ என நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருதினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உள்ளூர் வீரரான கோவையைச் சேர்ந்த பாலமுருகன் சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல் சுற்றில் 2-வது இடத்துடன் 91 புள்ளிகளைப் பெற்ற அவர், அடுத்த சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தார். பெங்களூரூவைச் சேர்ந்த சோஹைல் 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வீரர் நிர்மல் உமாசங்கர் 3-வது இடத்தையும் பிடித்தனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...