நூற்றாண்டு காலத்தின் உச்சம் ; கோவையில் கொட்டி தீர்த்த கோடை மழை

கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



கோடை மழையின் தாக்கத்தால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மரங்கள், செடிகள் என அனைத்து வகை தாவரங்களும் பச்சை பசேல் எனக் காட்சியளிக்கிறது. காட்டு தீ என சொல்லக்கூடிய பேராபத்திலிருந்தும் மேற்குதொடர்ச்சி மலை தப்பியது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் கோடை மழை 130 மி.மீ எதிர்பார்த்த நிலையில், 285 மி.மீ மழை தற்போது வரை பெய்துள்ளது. கோடை காலம் இன்னும் முடியவில்லை, எனவே மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நூற்றாண்டு கால வரலாற்றில் ஒர் உச்சம்.

பொதுவாக மே மாதம் அக்னி வெயிலில் 66 மி.மீ., மழை மட்டுமே பெய்யும். ஆனால், இந்தாண்டு மே மாதம் மட்டும் 232 மி.மீ மழை பெய்துள்ளது. 2015-ம் ஆண்டு கோடை மழை 260 மி.மீ பதிவாகியிருந்தது. அதன்பின், 2018-ம் ஆண்டு தற்போது வரை 285 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேளாண் பல்கலைக்கழக அறிவுரைப்படி, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது வைத்திருந்ததால் அவர்களுக்கு மண் வளம் அதிகரித்துள்ளது.



மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மரம், செடி, கொடி என அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கோடை காலத்தில் வரும் வழக்கமான பிரச்சினையான காட்டு தீ மற்றும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் பிரச்சினை மழை நீரினால் குறைந்துள்ளது. கோவையைப் பொருத்தவரை கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு குறைவாகவே வெயில் பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக 36.5 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 4 முதல் 5 கி.மீ வேகம் வரை வீசி வருகிறது, இது அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார்.

"மழை நீரை வீணாக்காமல் கால்வாய்கள் தூர்வார வேண்டும். சாலையின் ஓரம் உள்ள பகுதிகளில் நீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாக்கடைகள் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். மரக்கிளைகள் மழையில் விழாமல் இருக்க அதனைத் தடுக்க வேண்டும், கொசு முட்டைகள் உற்பத்தியாகாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர் அருள் ராஜ் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...