பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து, நடனமாடியபடி வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பழங்குடியின மக்கள்

கோவை: கோவை மாவட்டம் மணக்கடவு பகுதியில் பழங்குடியினர் சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க கோரி பாரம்பாரிய இசை மற்றும் நடனத்துடன் வந்து பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மணக்கடவு பகுதியில் பழங்குடியினர் சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க கோரி பாரம்பாரிய இசை மற்றும் நடனத்துடன் வந்து பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள மணக்கடவு பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது அம்மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து, நடனமாடியபடி வந்து மனு அளித்தனர்.



மனுவில், அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பழங்குடியினருக்கு சொந்தமான சுடுகாட்டினை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுதொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களது சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Video: Laxman

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...