கோவையில் இப்தார் நோன்பு திறப்பு

கோவை : ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை ஹதர் அலி திப்பு சுல்தான் தக்னி பள்ளி வாசல் மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


கோவை : ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை ஹதர் அலி திப்பு சுல்தான் தக்னி பள்ளி வாசல் மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். சமூக ஒற்றுமையை பேணுகின்ற வகையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இதில், அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அழைத்து ஒன்றாக அமர்ந்து நோன்பு கஞ்சி குடித்து உணவு உண்டு வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டும் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடைபெற்றது நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 



நேற்று மாலை 6:40 மணி முதல் 8:30 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி, பேரிட்ச்சை உள்ளிட்ட பழ வகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, "நாலெட்ஜ் சென்டர் " எனும் தகவல் மையத்தை ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் ஷபீர் அஹமது திறந்துவைத்தார். 

நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் (போக்குவரத்து) துணை ஆணையாளர் சுஜித்குமார், சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன், ஓசை சையது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...