கோவையில் கோடைகால சிறப்பு ஓவியக் கண்காட்சி தொடக்கம்

கோவை: கோடை கால சிறப்பு ஓவிய கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.


கோவை: கோடை கால சிறப்பு ஓவிய கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.



இது நாளையோடு நிறைவடைகிறது.இந்த கண்காட்சிக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கபடுவர்.இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் அக்ரலிக் பெயிண்டிங் மற்றும் ஆயில் பெயிண்டிங் மூலம் வரையப்பட்டுள்ளது.இதில் த்ரீடி ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது.



இதில் ஓவியர் சத்தியவானனின் ஓவியங்களான சிங்கம் அமர்ந்திருப்பது போன்று இருக்கும் ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்திருந்தது.அதேபோல ஓவியர் சினோஜ் அவர்கள் வரைந்த 3டி தஞ்சாவூர் ஓவியம் சிலைபோல அமைந்திருந்தது.



அதேபோல ஜீவன் சக்திவேல் கைவண்ணத்தில் வரையப்பட்ட இயற்கை சார்ந்த ஓவியங்கள் மற்றும் ராம்நகர் போர்ட் போன்ற ஓவியங்கள் சிறந்த ஓவியங்களாக பார்வையாளர்களை மத்தியில் பேசப்பட்டது.



அதுமட்டுமல்லாது இதில், குதிரைகள் ஓடிவருவது போன்ற ஓவியம்,கதக்களி ஓவியம்,காளான் ஓவியம்,பட்டாம்பூச்சி ஓவியம்,இரண்டு மான்கள் உணவுக்காக நிற்பது போன்ற ஓவியம் என மொத்தம் 70க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.இந்த ஓவியங்கள் 700 ரூபாய் முதல் 15ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படும் என ஓவியர்கள் தெரிவித்தனர்.



இது குறித்து ஓவியர்.எம்.சினோஜ் கூறியதாவது:-

நான் மதுக்கரையில் வசித்து வருகிறேன்.சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம்.சுமார் 10 ஆண்டுகளாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.எனது படைப்பில் 3டி தஞ்சாவூர் ஓவியம் மிகவும் நான் ரசித்து வரைவது.



எங்களின் எண்ணத்தையும் மக்களின் விருப்பங்களையும் படைப்பதே எனது மகிழ்ச்சி, என்றார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...