கோவையில் முதன்முறையாக தொழிற்சாலையைத் திறந்த பிரபல சீன நிறுவனம்

கோவை: சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை, முதன்முறையாக கோவையில் தனது கிளையை நிறுவியுள்ளது.

கோவை: சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை, முதன்முறையாக கோவையில் தனது கிளையை நிறுவியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் தனது கிளையை ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை நிறுவியது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான அரசூரையடுத்த உதுபாளையம் அருகே குளத்தோட்டத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள விற்பனையகம் மற்றும் தொழிற்சாலையை திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை இந்திய அளவிலான மேலாளர் சங்கீதா மற்றும் அதன் ஆசிய அளவிலான மேலாளர் டைசி வூ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலையைச் சேர்ந்த லாய் ஜோங்கியோ பேசுகையில், "பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், எங்களின் மிஷன் தயாரிப்பில் அதிக அளவு அனுபவத்தைக் கொண்டுள்ளோம். எங்களது நிறுவனம் உள்ளூர் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மெஷின்களை தயார் செய்து வருகிறோம். குறிப்பாக, மெருகூட்டும் இயந்திரம் சிறந்த தரத்தைப் பெற்றது. எங்களுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்," எனக் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...