3 மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் 200 கி.மீ கடந்து கொண்டு வரப்பட்ட உடலுறுப்பு: வெற்றிகரமாக நோயாளிக்கு பொருத்தி சாதனை

கோவை: மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் சாலை வழியாகக் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல், வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

கோவை: மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் சாலை வழியாகக் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல், வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்த செல்வி (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 13-ம் தேதி கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி 18-ம் தேதியன்று மூளை சாவு ஏற்பட்டது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் செல்வியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

இதையடுத்து, மறுநாள் காலை அவரது உடல் உறுப்புகளில் ஒரு பகுதியான கல்லீரல், மதுரையிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு சுமார் 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு, கல்லீரல் தேவைப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. மதுரையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிற்கு சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டு வருவதற்கு ஏதுவாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட போலீசார் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து, கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான நல்ல.ஜி. பழனிசாமி கூறுகையில், "மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால், காவல்துறை உதவியுடன் இது சாத்தியமாகி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினருக்கும், உடல் உறுப்புகளைத் தானமாக தர முன்வந்த செல்வியின் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...