திருப்பூர்: கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் ஹெலிகாப்டர் சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா தளங்களில் மட்டும் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற பயணத்தை திருப்பூர் நகரிலேயே ஏற்பாடு செய்திருந்தது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தனியார் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பயணம் செய்வோருக்கு 3 ஆயிரம் அடி உயரத்தில் மாநகரின் 30 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகள் சுற்றி காண்பிக்கப்பட்டது.
திருப்பூரில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளித்தனர்.