பயணிகளின் நெரிசலை தவிர்க்க சென்னை - கோவை சிறப்பு ரயில் இயக்கம்

கோவை: கோடை விடுமுறையில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: கோடை விடுமுறையில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரயில் எண் 06043 : சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் மே 22-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 06.45 மணியளவில் கோவையை வந்தடையும். இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 6 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 9 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு 20-ம் தேதி காலை 08 மணி முதல் தொடங்குகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...