உதகையில் தொடங்கியது மலர் கண்காட்சி : பூத்துக் குலுங்கும் மலர்களை கான பொதுமக்கள் ஆர்வம்..!

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.



ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த 122-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



வகைகள் 

இந்த மலர் கண்காட்சியில் இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆசியாடிக் லில்லி பம், பிளாக்ஸ், சால்வியா, பால்ஸம், உள்பட 18 மலர் வகைகள், 50 ஆயிரத்திற்கு மேலான பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் ஜீவ நாடியாகத் திகழும் பழமை வாய்ந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் சிவப்பு வெள்ளை கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி, பூங்காவிற்கு வரும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. 



பூங்காவிற்கு வரும் சிறுவர்களை ஈர்க்கின்ற வகையில் பார்பி டால் என்றிழைக்கப்படும் பொம்மை 1500 ஆர்கிட் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 



மேலும், கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் 'செல்பி' எடுத்துக்கொள்ள ஏதுவாக 'செல்பி-ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது மலர் கண்காட்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...