சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்ய எதிர்ப்பு : மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது என ஆசிரியர்கள் கருத்து

கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு அனுமதித்த ஒவியம், தையல், இசை பாடங்களுக்கான சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் 3,333 ஆகும். இதில், 2017-ம் ஆண்டின் நிலவரப்படி 2,454 சிறப்பாசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 880 சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. 

கோவை மாவட்டத்தில் 192 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 109 பள்ளிகளில், சிறப்பாசிரியர்கள் பணிபுரிகின்றனர். ராஜினாமா, பணி ஓய்வு காரணமாக, தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளன. மற்ற பள்ளிகளில், ஓவிய பாடத்துக்கு நிரந்தர ஆசிரியர் இல்லை எனவும் கூறப்படுக்கிறது. இப்பணியிடங்களுக்காக, கடந்தாண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறும் போது :- கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையால், பல பள்ளிகளில் ஓவிய பாடமே, காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 250 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளில், பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்படவுள்ளனர். அதேபோல, அப்பள்ளிகளில் இருந்து அந்தப் பணியிடமும் வரும் காலங்களில் நீக்கப்படும் எனக் கருதுகிறேன்.

பெரும்பாலான பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 சிறப்பாசிரியர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணி நிரவல் செய்யப்படவுள்ளனர். இதுபோன்ற திட்டங்களால் பல ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 2012-ம் ஆண்டு தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக 16,549 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள், என்றார்.



இதேபோல, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து ஓவிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "அரசுப்பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்க, சிறப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். மாணவர் சேர்க்கை குறைவதற்கும், கலைப்பாட ஆசிரியர்களுக்கும் சம்பந்தமே இல்லை. 250 மாணவர்களுக்கு கீழ் படிக்கும், அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இப்பள்ளிகளின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதால், எந்தப் பலனும் இல்லை. இதன்மூலம், மேலும் மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது' என்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் கூறுகையில், "சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்யும்படி எந்த அரசாணையும் இதுவரை வரவில்லை," எனக் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...