நாளை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21-ல் வழங்க முடிவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 66,934 மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. இந்நிலையில் நாளை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் தேர்வுத் துறையின் இணையதளங்களான www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகியவற்றில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

அதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 21-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...